சென்னை: அரசு பணிகள் வழங்கியதில் ரூ.888 கோடி ஊழல் செய்த விவகாரத்தில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவுசெய்ய லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
நகராட்சி நிர்வாக துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு, அரசு பணிகள் வழங்குவதற்கு லஞ்சம் பெறப்பட்டது தொடர்பாக அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் கே.என். நேரு உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் அமைச்சர் நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி, அமலாக்கத் துறை சார்பில் தமிழக டிஜிபி-க்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அதிமுக எம்.பி. இன்பதுரை மற்றும், ஆதிநாராயணன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. அப்போது விசாரணைக்கு ஆஜரான மத்தியஅரசின் வழக்கறிஞர், வேறொரு வழக்கு விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை டிஜிபி-க்கு அனுப்பி வைத்துள்ள தாகவும், அவற்றின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசுத் தரப்பில், ஆஜரான வழக்கறிஞர், அமலாக்கத் துறையின் கடிதம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.‘
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நகராட்சி நிர்வாக துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது. அதனால், அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில், வழக்கு பதிவு செய்வதற்கான போதுமான ஆதாரங்களை அமலாக்க துறை சமர்ப்பித்துள்ளதால் ஆரம்பகட்ட விசாரணை நடத்த தேவை யில்லை என சுட்டிக்காட்டிய உயர்நீதிமன்றம், அமலாக்க துறை அளித்த கடிதங்களில் போதுமான ஆதாரங்கள் உள்ளதால் வழக்குப்பதிவு செய்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், இதுதொடர்பாக ஆதிநாராயணன் என்பவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[youtube-feed feed=1]