சென்னை: அடுத்த 2 மாதத்தில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என  உறுதிபட தமிழக சட்டப்பேரவையில்  பேசிய முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் உள்பட அனைத்த உறுப்பினர்களும் நன்றி தெரிவித்தார்.

தற்போதைய திமுக அரசின் ஆட்சி காலம் முடிவடைய உள்ள நிலையில், இன்றைய நாள் சட்டபபேரவையின் கடைசி நாளாகும். அடுத்த பேரவை, புதிய அரசு அமைந்த பிறகே கூடும. இந்த நிலையில், இன்று இடைக்கால பட்ஜெட் தொடர்பான  விவாதங்களுக்கு துறை சார்ந்தஅமைச்சர்களான தங்கம் தென்னரசு எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பதில் அளித்து பேசினார்.

இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது,  இவ்வாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை, வேளாண் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சிறப்பான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளோம்  என்றவர்,  அடுத்த 2 மாதங்களில் இன்னும் வேகமாக வந்து பணியை தொடர்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

2021 தேர்தலில் வெற்றி பெற்றபோது மகிழ்ச்சியோடு கவலையாக இருந்தது.  மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஆட்சி நடத்த முடியுமா? என்ற கவலை இருந்தது.   நமக்கு சிறிதும் ஒத்துழைக்காத ஓரவஞ்சனை காட்டும் மத்திய அரசு.  நிதிநிலை சீராக இல்லாத நிலையிலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். * கடந்த 5 ஆண்டுகளில் எனக்கும், எனது மனசாட்சிக்கும் மட்டுமே கட்டுப்பட்டு உழைத்தேன்.

எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக கையாண்டிருக்கிறேன். எனக்கும், ஆளுநருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த முரணும் கிடையாது என்றவர்,  வரலாற்று சிறப்புமிக்க இந்த இருக்கையில் எனக்கு முன் இருந்த பலரும் இன்று இல்லாவிட்டாலும் அவர்கள் அனைவரும் போற்றப்படக்கூடியவர்கள். பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை, எதையும் தாங்கும் வல்லமை, கடமை தவறாமை ஆகிய பண்புகளை நானும் கடைபிடித்திருக்கிறேன் என்று கூறியவர்,  5 ஆண்டுகள் ஆட்சி குறித்த மனநிறைவோடு நான் உங்கள் முன்னால் நிற்கிறேன் என்றார்.

தொடர்ந்து பேசியவர்,  தமிழகத்தின் சுயமரியாதைக்கு இழுக்கு வந்தால் அதனை எதிர்க்கும் முதல் நபராக நான் இருப்பேன் என்று கூறியதுடன்,  தமிழகத்தின் 234 தொகுதிகளையும் எனது தொகுதிகளாக பாவித்து பணியாற்றி வருகிறேன்.  வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாகுபாடும் இன்றி பணியாற்றி இருக்கிறேன்.

எங்கள் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவுக்கு திராவிட மாடல் 2.0 ஆட்சி இருக்கும். உறுதியாக மீண்டும் வென்று ஆட்சிக்கு வந்து, தமிழ் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவோம் என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அவை கண்ணியத்தை கடைபிடித்து குறைகளை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்-க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி  தெரிவிப்பதாக கூறியவர்,   ஆளுங்கட்சி எதிர்கட்சி என்றில்லாமல் என் மீது எப்போதும் அன்புகாட்டும் உறுப்பினர்களுக்கு நன்றி. எதிர்கட்சி தலைவர் இன்று வரவில்லை என்றாலும், இ.பி.எஸ்., உட்பட அனைத்து கட்சி தலைவர்களுக்கும்  நன்றி தெரிவித்ததுடன், என்னை தேர்ந்தெடுத்து அனுப்பிய கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நன்றி. மிகப்பெரிய வாய்ப்பு தந்த தமிழ்நாடு மக்களுக்கு நன்றி என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரியாற்றினார். 

தமிழ்நாட்டை இன்னும் வலிமையாக்கும் நம்பிக்கையை பெற்றுள்ளோம். மீண்டும் ஆட்சிக்கு வந்து திட்டங்களை தொடர்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

[youtube-feed feed=1]