சென்னை: திமுக ஆட்சியின் தற்போதைய நிலை குறித்த ‘Report Card’ஐ தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டு உள்ளார்.

முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தேர்தலின் போது அளித்த 505 வாக்குறுதிகளின் தற்போதைய நிலை குறித்த ‘Report Card’ இதோ. விவசாயம், சட்டம் ஒழுங்கு, மகளிர் பாதுகாப்பு எனப் பிரதான துறைகள் அனைத்திலும் இந்த அரசு தோல்வியடைந்துள்ளதை அரசுப் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
திராவிட மாடல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் இந்த #ALLFAIL அரசாங்கத்தின் உண்மை நிலையை இக்காணொளி வாயிலாக மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், திராவிட மாடல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் இந்த #ALLFAIL அரசாங்கத்தின் உண்மை நிலை வெளியிடப்பட்டு உள்ளதாக கூறினார். சந்திப்பின்போது நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு. M R காந்தி அவர்கள், தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திருமதி. வானதி சீனிவாசன் அவர்கள், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திருமதி. C சரஸ்வதி அவர்கள் உடன் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தேர்தலின் போது அளித்த 505 வாக்குறுதிகளின் தற்போதைய நிலை குறித்த ‘Report Card’ இதோ.
விவசாயம், சட்டம் ஒழுங்கு, மகளிர் பாதுகாப்பு எனப் பிரதான துறைகள் அனைத்திலும் இந்த அரசு தோல்வி அடைந்துள்ளதை அரசுப் புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்துகின்றது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
விவசாயம், சட்டம் ஒழுங்கு, மகளிர் பாதுகாப்பு எனப் பிரதான துறைகள் அனைத்திலும் இந்த அரசு தோல்வியடைந்துள்ளதை அரசுப் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிட மாடல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் இந்த ALLFAIL அரசாங்கத்தின் உண்மை நிலையை இக்காணொளி வாயிலாக மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கிறேன்”.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]