வேலூர்: தவெக தலைவர் விஜய் பிப்ரவரி 23ந்தேதி வேலூரில் பரப்புரை மேற்கொள்கிறார். அவரது கூட்டத்தில் கலந்துகொள்ள 4900 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

வேலுர், அகரம்சேரியில் பிப்.23 ஆம் தேதி நடைபெறவுள்ள விஜய் பரப்புரை கூட்டத்தில் QR CODE பாஸ் வைத்திருக்கும் 4,900 தவெக நிர்வாகிகளுக்கு மட்டுமே கலந்துக்கொள்ள அனுமதி என தவெக அறிவித்துள்ளது. மேலும், குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் பங்கேற்பதை தவிர்க்க தவெக சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
முன்னதாக, வேலூரில் பொதுக்கூட்டம் நடத்த தவெகவினர் மாவட்ட காவல்துறை எஸ்.பி.,யிடம் மனு அளித்தனர். அதில், காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளை 100% பின்பற்றுவோம், 50 மருத்துவர்கள், 100 செவிலியர்கள் கொண்ட மினி மருத்துவமனை ஏற்பாடு செய்வோம், அவசர கால உதவிக்காக 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஏற்பாடு செய்வோம் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்த மனுவை தவெக வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் எஸ்.பி.,யிடம் அளித்துள்ளார். இதை ஆய்வு செய்த காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தவெக பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது.
இதையடுத்து விஜய் கலந்துகொள்ளும் வேலூர் பொதுக்கூட்டத்துக்கான எற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த தவெக கூட்டத்திலேயே முதன்முறையாக வேலூரில் நடைபெறும் தவெக சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பந்தல் போடப்படுகிறது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. மேலும் அங்கு 5,000 நாற்காலிகள் போடப்பட்டு, அதனுடன் தண்ணீர் பாட்டிலும் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
விஜய் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டம் ஒன்றில் கூட, பந்தல் அமைக்கப்படவில்லை. முதன்முறையாக அதில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார் விஜய். வெயிலின் தாக்கத்தால் கூட்டத்துக்கு வரும் தொண்டர்கள் வாட்டி வதைக்கப்படுகின்றனர். மேலும், சேலத்தில் வெயிலின் தாக்கத்தாலேயே சுராஜ் என்ற வடமாநில இளைஞர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு, தமிழக வெற்றிக் கழகமும் அக்கட்சியின் தலைவர் விஜய்யும் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே விஜய் கூட்டத்துக்குச் சென்றால் உயிரிழப்பு ஏற்படுகிறது என்ற பொதுவாக கருத்துக்கு மத்தியில், இனி தவெக கூட்டத்தில் ஒரு உயிர் கூட போகக் கூடாது என்ற மனநிலையில், கட்சியும் விஜய்யும் உள்ளனர்.
[youtube-feed feed=1]