சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  மணடல அலுவலர்களுக்கு 3 கட்ட பயிற்சி வகுப்பு  நடத்தபபட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மற்ற தேர்தல் அலுவலர்களுக்கும் விரைவில்  அறிவிக்கப்பட  உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து புதிய அரசு மேமாதம் பதவி ஏற்கும். இதையொட்டி, அரசியல் கட்சிகளின் தேர்தல்  நடவடிக்கை சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில், தேர்தல் ஆணையமும் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் மேற்கொண்டு, இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், போலி வாக்காளர்கள் என பல ஆயிரம் பேரை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து வரும் 23ந்தேதி வெளியிடப்பட உள்ளது. மேலும் வாக்குச்சாவடிகள், வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் சார்பில், தேர்தல் அலுவலர்களுக்கு 3 கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து விரைவில், தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ள அலுவலர்களுக்கும் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2026-ல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக மண்டல அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/இணை ஆணையாளர் (கல்வி) க. கற்பகம், இ.ஆ.ப., தலைமையில்  ரிப்பன் கட்டிட வளாக கூட்டரங்கில் நடைபெற்றது.

இப்பணிகளில் ஈடுபடவுள்ள மண்டல அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், காவல்துறையினர், தேர்தல் பணி தொடர்புடைய இதர துறையினர் உள்ளிட்ட 1000 அலுவலர்களுக்கு காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று கட்டங்களாக பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

[youtube-feed feed=1]