சென்னை: மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அதிமுக அமைச்சருமான ’88வயது தாத்தா’வுமான பண்ருட்டிராமச்சந்திரன் ‘எம்ஜிஆர் அதிமுக’ என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.

பண்ருட்டிராமச்சந்திரன், திமுக, அதிமுக என பல கட்சிகளுக்கு சென்று வந்த நிலையில், தற்போது திடீரென புதிய கட்சியைதொடங்கி உள்ளார். தற்போது அரசியல் என்பது சேவை என்பதை விட்டு, தொழிலாக மாறிவிட்ட நிலையில், அதில் வருமானத்தை மட்டுமே அரசியல்வாதிகள் எதிர்நோக்கி தேர்தலை சந்திக்கின்றனர். அந்த வகையில், தனது 88வயதிலும் மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ‘எம்ஜிஆர் அதிமுக’ என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
இவர், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், கருணாநிதியின் அமைச்சரவையில் பணியாற்றியவர். பின்னர் ஜெ தலைமையிலான அதிமுகவில் தொடர்ந்த நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா ஆதரவாளராகவும் பின்னர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராகவும் அடையாளம் காணப்பட்டார்.
இநத் நிலையில், அவர் தனது தள்ளா வயதான 88 வயதில் ‘எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, , தனது கட்சி தேர்தலில் போட்டியிடாது என்றும் ஒத்த கருத்துடையவர்களுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவிப்போம் என்றும் கூறியுள்ளார்.
தனது கட்சியின் அறிமுக விழா பிப்ரவரி 23 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறும் என்றறவர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அத்தியாயம் முடிந்துவிட்டது. அதனால், ஓபிஎஸ்ஸுடன் எனது வாழ்நாளை வீணாக்க முடியாது , அதனால் தனிக்கட்சி தொடங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
பண்ருட்டி ராமச்சந்திரன் 1967ல் திமுக எம்எல்ஏ ஆன நிலையில் 1971ல் மீண்டும் பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1977ல் அதிமுகவில் இணைந்த பண்ருட்டி ராமச்சந்திரன் அங்கிருந்து பாமகவுக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து விலகி, மக்கள் நலவுரிமைக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். அதுவும் போனியாக நிலையில், விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது தனது கட்சியை கலைத்துவிட்டு தேமுதிகவில் இணைந்தார்.
ஆனால், விஜயகாந்தின் அதிரடி இவருக்கு ஒத்துவராத நிலையில், அங்கிருந்து விலகி, மீண்டும் அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா ஆதரவாளராகவும் பின்னர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராகவும் மாறினார். தற்போது தனது அறிவாற்றல் இந்த கட்சிகளிடம் போனியாகாத நிலையல், தனிக்கட்சிதொடங்கி உளளார்.
[youtube-feed feed=1]