சென்னை: தமிழ்நாட்டில்  நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமை வரும் 20ந்தேதி முதல் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு பெறலாம் என அறிவித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தல் விருப்ப மனுவுக்கான விண்ணப்பக் கட்டணமாக, பொதுத் தொகுதிக்கு ரூ.25 ஆயிரமும், மகளிர் மற்றும் தனித்தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும் செலுத்த வேண்டும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நடைபெறவிருக்கும் தமிழ்நாடு – புதுச்சேரி மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலுக்கு திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் பிப்.20 (வெள்ளிக்கிழமை) முதல் மார்ச் 3ஆம் தேதி வரை தலைமைக் கழகத்தில் விண்ணப்பித்திட வேண்டுகிறேன்.

விண்ணப்பக் கட்டணம்:

தமிழ்நாடு – புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தொகுதி விருப்ப மனுவை பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணமாக, பொதுத் தொகுதிக்கு ரூ.25 ஆயிரமும், மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும் செலுத்த வேண்டும்.

வேட்பாளராக போட்டியிட விண்ணப்பிப்பவர்கள் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்பக் கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும்.

விண்ணப்பபடிவம் தலைமைக் கழகத்தில் ரூ. 1,000 வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்”

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]