சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று யார் ஆட்சியில் வளர்ச்சி?  என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சமி மற்றும் நிதியமைச்ச  எடப்பாடி தங்கம் தென்னரசு இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலுக்கு முன்னதான கடைசி சட்டசபை கூட்டம் நேற்று (பிப்ரவரி 17) தொடங்கியது. இதில்முதல் நாளில், தமிழகத்தின் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு  தாக்கல் செய்தார்.

இதையடுத்து இன்றுமுதல் பட்ஜெட்மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்தின்போது பேசிய அமைச்சர்,  தங்கம் தென்னரசு,  திமுக ஆட்சியில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் ஒற்றை இலக்க வளர்ச்சி மட்டுமே பதிவாகியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலடி கொடுத்த  தற்போதைய எதிர்க்கட்சி தலைவரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,   அதிமுக ஆட்சிக் காலத்திலும் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வாதிட்டார். திமுக ஆட்சியிலேயே மட்டும் வளர்ச்சி ஏற்பட்டது என்று கூறுவது தவறானது என்றும் அவர் தெரிவித்தார்.

“நாங்கள் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொன்னோம்; அது விளம்பரம் அல்ல,” என்றும் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது.

பதினைந்து ஆண்டுகளில் 11.9% சதவீத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது” என திமுக அரசு கூறுவது வேடிக்கையானது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் மட்டும் அல்லாமல், அதிமுக ஆட்சிக் கால வளர்ச்சியும் சேர்ந்து தான் இந்த 11.9% சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பல ஆண்டுகளாக ஏற்பட்ட வளர்ச்சியின் தொடர்ச்சிதான் தற்போதைய நிலை என்றும் அவர் கூறினார்.

மேலும், விளம்பர ஆதாயம் பெறுவதற்காக தமிழ்நாடு அரசு இவ்வாறு கூறி வருவதாகவும், விளம்பரம் செய்வதையே தங்களது முக்கிய செயலாகக் கொண்டு செயல்படுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். “நாங்கள் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொன்னோம்; அது விளம்பரம் அல்ல,” எனவும் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

மேலும்,   தமிழக அரசு பொருளாதார வளர்ந்நி 11.19 சதவீதம் என்று சொல்கிறது. ஆனால் விவசாயம் 1.83 சதவீதம் வீழ்ச்சி என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய தங்கம் தென்னரசு,  எதிர்க்கட்சி தலைவர்  மொத்த வளர்ச்சி பற்றி பேசாமல், தனி துறைகளின் வளர்ச்சி பற்றி பேசுவது ஏற்புடையது அல்லஎன்றார்.

இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி,  உங்கள் ஆட்சியில் மட்டும் உற்பத்தித்துறை வளர்ச்சி அடைந்ததாக கூறுவதை ஏற்க முடியாது. செய்த சாதனையை மக்களிடம் சொன்னோம். உங்களைப் போல நாங்கள் விளம்பரம் செய்யவில்லை என்று சொல்ல,

அதற்கு பதில் கூறிய அமைச்சர், அரசுக்கு விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றவர்,  கொரோனா காலக்கட்டத்தை ஒப்பிட்டு பேசுவது சரியில்லை என்று சொல்ல, தமிழ்நாடு அரசு வளர்ச்சியில் அ.தி.மு.க எந்த பங்களிப்பையும் செய்யவில்லை என்று மீண்டும் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் ஏற்பட்ட இந்த விவாதம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

[youtube-feed feed=1]