சென்னை:  தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி,  வரும் மார்ச் 16ம் தேதி  தேர்தல்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் மார்ச் 16ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர்.இளங்கோ, செல்வராஜ், ஜி.கே.வாசன், தம்பிதுரை ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2ந்தேதி நிறைவடைகிறது. இதையொட்டி, 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் மார்ச் 16 -ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் பிப்ரவரி 26 -ஆம் தேதி தொடங்குகிறது. மார்ச் 5 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும் .

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 6 ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 9-ஆம் தேதி கடைசி நாளாகும். வாக்குப்பதிவு நடைபெறும் மார்ச் 16-ஆம் தேதி மாலையே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் கட்சிகளில் உள்ள எம்.எல்.ஏக்கள் அடிப்படையில் தி.மு.க 4 எம்.பிக்களையும், அ.தி.மு.க 2 எம்.பிக்களையும் தேர்வு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  அதிமுக தரப்பில் ஒரு எம்.பி. பதவி தேமுதிகவுக்கு சென்றுவிடும் நிலையில், ஒரேஒரு எம்.பி. பதவி மட்டும்தான் அதிமுகவுக்கு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக,  தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிப்.26 ல் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்புமனுத் தாக்கல் செய்ய மார்ச் 5ம் தேதி கடைசி நாள் எனவும், மார்ச் 6ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு வாபஸ் பெற மார்ச் 9ம் தேதி கடைசிநாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மார்ச் 16ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும்,  அதே நாளில் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்கு வங்காளம், மகராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்த 37 இடங்களுக்கும் காலியாகின்றன. இந்த 37 இடங்களுக்கான எம்.பிக்களை தேர்வு செய்யும் மாநிலங்களவை தேர்தல் வரும் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறுகிறது.

[youtube-feed feed=1]