சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் துறை வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:-

தமிழக அரசின் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,   தமிழ்நாட்டின் கடைக்கோடி மக்களும் பயன் பெறும் வகையில் இடைக்கால பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்தியாவுக்கே வழிகாட்டும் வரலாற்று கடமையை நாம் செய்து வருகிறோம். மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை மீறியும் தமிழ்நாடு வளர்ந்து வருகிறது. இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை தொடங்கியுள்ளோம். ஏற்றுமதியை பெருக்கி, பண வீக்கத்தைக் குறைத்து, உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது.

தமிழ்நாடு இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சியை அடைய பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்திய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி என கூறியதுடன், தொடர்ந்து பட்ஜெட்டை வாசித்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மாதந்தோறும் ரூ.1000 1.31 கோடி பெண்கள் பயன் சிறப்பு தொகையாக ரூ.5000 வரவு

மகளிர் சுய உதவிக் குழு இயக்கம் மகளிரின் தற்சார்பான வாழ்வுக்கு … 6,23,529 குழுக்கள் ரூ.1,41,718 கோடி வங்கிக் கடன்.

தமிழ்நாடு முழுவதும் 19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

TNWESafe தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்புப் பாதுகாப்புத் திட்டம்!

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்!

அன்புக்கரங்கள் திட்டம்!

மாற்றுத்திறனாளிகள் நலன்! உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் உறுப்பினர்கள் நியமிக்க சட்டவிதிகளில் திருத்தம்!

தமிழ்நாட்டில் 41% பெண்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர்.

* 4 வழிச்சாலைகள், மேம்பாலங்கள் என தமிழ் நிலப்பரப்பு முன்னேறி வருகிறது.

* திருக்குறளை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

* நமது திட்டங்களை பிற மாநில அரசுகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளன; மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை ஒரு புறம் இருக்கிறது.

* நாட்டிலேயே முதன்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில்

* மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

* மிகப்பெரும் அளவில் வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் அதே நேரத்தில் சிறு, குறு தொழிலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது

* உணவு உற்பத்தியில் வரலாறு காணாத சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளோம்

* செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அறிவுசார் பொருளாதாரத்தில் தமிழக இளைஞர்கள் சிறந்து விளங்கிடும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம்

* மாவட்டம் தோறும் தொழில் பூங்காக்கள், மேம்பாலங்கள், பறவைகள் சரணாலயங்கள், பசுமை வழிப்பயணத்திற்கு உரிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது

விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை மகளிர் பயணம் செய்து பயனடைந்துள்ளனர். 6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் நலன் காக்கும் இத்தகையை திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கி உள்ளன.

மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது.

பெண் ஓதுவார் நியமனம் நமது அரசின் மகத்தான சாதனை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

உயர் கல்வித்துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு.

சிறப்பு திட்ட செயலாக்கத்துறைக்கு ரூ.17,088 கோடி ஒதுக்கீடு.

முதல்வர் கிராம சாலைத் திட்டத்திற்கு ரூ.8,911 கோடி நிதி ஒதுக்கீடு.

விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு.

கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,171 கோடி மதிப்பீட்டில் மடிக்கணிகள் வழங்கப்பட்டுள்ளன.

சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.17,088 கோடி ஒதுக்கீடு

பெண் ஓதுவார் நியமனம் தமிழக அரசின் மகத்தான சாதனை.

ஏழை எளிய தாய்மார்களின் துயரை துடைக்கும் வகையில் காலை சிற்றுண்டித் திட்டம். ரூ.1884 கோடியில் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் நடைமுறையில் உள்ளது.

எரிசக்தித்துறைக்கு ரூ.18,301 கோடி ஒதுக்கீடு

* 25 இடங்களில் மூத்த குடிமைக்களுக்காக அன்பு சோலை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. *

பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிவு செய்வதற்கான கட்டணத்தில் 1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு, பணி உயர்விலும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. *

அரசு மருத்துவமனைகளில் மிகவும் பாதுகாப்பான பிரசவங்களில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. *

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.1,471 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]