சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில்,மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர்கள் மரியாதை செய்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நடப்பாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்து முடித்ததும், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர்.
[youtube-feed feed=1]