சென்னை:தமிழ்நாடு சட்டபபேரவை நாளை கூடும் நிலையில், நாளைய தினமே 2026-27ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, அவை அமைச்சர்கள் வேலு, கோழி செரியன் ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதையடுத்து., முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் இடைக்கால நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையொட்டி, அவையை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் நாளை(பிப். 17) 2026-27 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு இடைக்கால நிதிநிலை அறிக்கை செய்யப்பட உள்ளது. இதை ஏற்கனவே சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அதன்படி நாளை காலை 9.30 மணிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை தாக்கல் செய்வார். தொடர்ந்து அலுவல் ஆய்வுகுழு கூடி, எத்தனை நாள்கள் அவை செயல்படும் என்பது முடிவு செய்யப்படும்.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார். பேரவை உறுப்பினர்கள் அனைவரும் நாளை வரவுள்ளதால் சட்டப்பேரவை மேசை, மைக், இருக்கை கள் என செய்யப்பட்டுள்ள அனைத்து முன்னேற்பாடுகளையும் ஆய்வு செய்தார். உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியனும் உடனிருந்தார்.
[youtube-feed feed=1]