கோவை: விஜய் பிறப்பதற்கு முன்பே கலைஞர் கருணாநிதி பல துறைகளில் சாதனை படைத்துவிட்டார் என கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அரசியல் அறியாமையின் உச்சத்தில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விமர்சித்து உள்ளார்.

ரூ 6.64 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு இடங்களில் புதிய கட்டிடங்கள், மருத்துவ கருவிகள் திறப்பு விழா மற்றும் TYPHOID தடுப்பூசி முகாம் ஆய்வு நடவடிக்கைளில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈடுபட்டார். இதையடுத்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12 கோடி மதிப்பிலான புதிய மருத்துவ கட்டடங்கள் மற்றும் நவீன வசதிகளைத் திறந்து வைத்தார்.
இதையடுத்து, ரூ 1.48 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் மாநகராட்சி – வடவள்ளி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து வைத்தார். தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சி – தெலுங்குபாளையத்தில் ரூ 1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், விஜய் பிறப்பதற்கு முன்பே தமிழகம் பல துறைகளில் சாதனை படைத்துவிட்டதாக குறிப்பிட்ட அமைச்சர், கலைஞர் கருணாநிதியின் அளப்பரிய சாதனைகளை குறிப்பிடாமல் விஜய் பேசுவது அவரது புரிதல் இன்மையையே காட்டுகிறது என்றார்.
தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில், இந்தியாவிலேயே உயர்கல்வி துறையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், உரிய அங்கீகாரம் இன்றி மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக அமைச்சரின் இந்த அதிரடி விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[youtube-feed feed=1]