சென்னை: ​ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டாஸ்மாக் ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள்  மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தலைமை செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டாஸ்மாக் பணி​யாளர்​கள் இன்று குடும்​பத்​துடன் தலைமைச் செயல​கத்தை முற்​றுகை​யிட்டு போராட்டம் நடத்​தவுள்​ள​தாக, தமிழ்​நாடு டாஸ்​மாக் பணி​யாளர்​கள் சங்​கம் (ஏஐடி​யுசி) தெரி​வித்​துள்​ளது. தமிழகத்​தில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வரு​கின்​றன, இந்த கடைகளில் 25 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தொகுப்​பூ​திய, ஒப்​பந்​தப் பணி​யாளர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர்.

‘தொகுப்​பூ​திய, ஒப்​பந்​தப் பணி​யாளர்​கள் அனை​வரை​யும் பணி நிரந்​தரம் செய்​து, அவர்​களுக்கு கால​முறை ஊதி​யம் வழங்க வேண்​டும். பணி நிறைவுக்கு பிறகு ஓய்​வூ​தி​யம் வழங்க வேண்​டும் என கடந்த 15 ஆண்​டு​களாக வலி​யுறுத்தி வரு​கின்​றனர். மேலும், காலி மது​பாட்​டில்​கள் திரும்​பப் பெறும் திட்​டத்தை டாஸ்​மாக் கடை பணி​யாளர்​களை கொண்டு செயல்​படுத்​தாமல் மாற்று திட்​டத்தை ஏற்​பாடு செய்ய வேண்​டும் என்பது உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

இது தொடர்​பாக, டாஸ்​மாக் நிர்​வாகம், அமைச்​சர் என பலமுறை பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றும் இந்த பிரச்​சினை​களுக்கு தீர்வு கிடைக்​க​வில்லை என டாஸ்​மாக் பணி​யாளர்​கள் தெரிவிக்​கின்​றனர்.

இந்​நிலை​யில், இன்று (3-ம் தேதி) சென்னை எழும்​பூரில் உள்ள டாஸ்​மாக் மேலாண்மை இயக்​குநர் அலு​வல​கத்​தில் இருந்து பேரணி​யாக சென்​று, தலைமைச் செயல​கம் முன் குடும்​பத்​துடன் முற்​றுகை போராட்​டத்​தில் ஈடு​பட​வுள்​ள​தாக, தமிழ்​நாடு டாஸ்​மாக் பணி​யாளர்​கள் சங்​கம் (ஏஐடி​யுசி) தெரி​வித்​துள்​ளது.

இந்த போராட்​டத்​தில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் மற்​றும் முன்​னாள் மாநில செய​லா​ளர் முத்​தரசன் ஆகியோர் பங்​கேற்க உள்​ளனர்.

அதுபோல, இன்றுமுதல்  சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே ஜனவரி 20-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். இதையடுத்து,  சத்துணவு ஊழியர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் சமூக நலத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், திட்டமிட்டபடி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள்  தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் திடீரென சாலை மறியல் செய்ய முயன்றனர். இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களைத் தடுத்தனர். இதனால், போலீசாருக்கும் சத்துணவு ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து சத்துணவு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இநத நிலையில், இன்றுமுதல் மீண்டும்  சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்து உள்ளனர். இந்த போராட்டத்தில், சத்துணவுத்துறையில் பணியாற்றி வரும் சமையல் உதவியாளர்கள் என, 80,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இத்துறையில், பல ஆண்டுகளாக, 40 சதவீத காலிப்பணி யிடங்கள் உள்ளதால், பணிச்சுமையுடன் பணியாற்றுகின்றனர். அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் கிடையாது! ஆக்டோ ஜியோவுக்கு தலைமைச் செயலர் எச்சரிக்கை

[youtube-feed feed=1]