மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில் உலகளாவிய இரண்டு நாள சுற்றுலா மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட் ஷெரட்டான் ஹோட்டலில் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தும் விதமாக உலகளாவிய சுற்றுலா மாநாடு நடைபெற உள்ளது. சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 2 நாட்கள் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது.

தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் தனியார் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் இன்றும், நாளையும் (பிப்ரவரி 2, 3) ‘தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு’ நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து சுற்றுலாத் துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சுற்றுலாத் துறையில் தனியாா் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், பொது மற்றும் தனியாா் துறை முதலீடுகளை ஈா்க்க பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் தனியாா் முதலீடுகளை ஈா்க்க ‘தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு’ நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள ஷெரட்டன் குழுமத்தின் ஃபோா் பாயிண்ட்ஸ் நட்சத்திர விடுதியில் இன்றும், நளையும் (பிப்ரவரி 2, 3) ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா்.
இந்த மாநாடு பல்வேறு சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கும், சுற்றுலா முதலீட்டாளா்களுடன் பொது தனியாா் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என சுற்றுலாத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]