டெல்லி:  திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தீர்ப்பு அளித்த நீ​திபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனுக்கு எதி​ரான அவதூறு கருத்​துகள் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரிய மனு தொடர்​பாக, உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக டிஜிபி அறிக்கை தாக்​கல் செய்​துள்​ளார்.

மதுரை திருபரங்​குன்​றம் தீபத் தூணில் தீபம் ஏற்​று​மாறு தீர்ப்​பளித்த உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனுக்கு எதி​ராக அவதூறு கருத்​துகளைத் தெரி​வித்​தவர்​கள் மீது நடவடிக்கை கோரி, பாஜக வழக்​கறிஞர் ஜி.எஸ்​.மணி தாக்​கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்​கு​மாறு தமிழக அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் கடந்த ஜனவரி  29-ம் தேதி உத்​தர​விட்​டது.

இது தொடர்​பாக சட்​டம்​-ஒழுங்கு டிஜிபி (பொறுப்​பு) வெங்​கட்​ராமன் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​துள்ள நிலை அறிக்​கை​யில்,  நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் குறித்து அவதூறாகப் பேசிய திமுக, இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் உள்​ளிட்ட அரசி​யல் கட்​சிகளை சேர்ந்​தவர்​கள், திட்​ட​மிட்டு அவதூறு கருத்​துகளைப் பரப்​பிய​வர்​கள் மீது வழக்​குப் பதிவு செய்ய சென்னை காவல் துறை சார்​பில் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

சைபர் க்ரைம் போலீ​ஸாரிடம் இந்த விவ​காரம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், ஜி.எஸ்​.மணி குறிப்​பிட்​டுள்ள யூடியூப் சேனல்​கள் மற்​றும் சமூக வலை​தளங்​களை இயக்​கும் நபர்​களை கண்​டறிய​வும், அவதூறு கருத்​துகளை நீக்​க​வும் சம்​பந்​தப்​பட்​ட​வர்​களுக்கு கடிதம் அனுப்​பப்​பட்​டுள்​ளது.

புத்தகங்கள் பறிமுதல்: நீதிபதியை அவதூறாக சித்​திரிக்​கும் கார்ட்​டூனை அட்​டைப் படமாக கொண்ட புத்​தகங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. இந்த விவ​காரத்தை சைபர் க்ரைம் போலீ​ஸார் தொடர்ந்து கண்​காணித்து வரு​கின்​றனர்.

மேலும், இது தொடர்​பாக உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் முற்​றுகைப் போராட்​டம் நடத்த திட்​ட​மிட்​டிருந்த ஐக்​கிய முஸ்​லிம் முன்​னேற்​றக் கழகத்​தைச் சேர்ந்த 15 பேர் கைது செய்​யப்​பட்​டு, ஜாமீனில் விடுவிக்​கப்​பட்​டுள்​ளனர். இதே​போல, குரு​சாமி தலை​மையி​லான சமூக நல்​லிணக்​கத்​துக்​கான மக்​கள் கூட்​டமைப்​பைச் சேர்ந்த 37 பேர் கைது செய்​யப்​பட்​டு, ஜாமீனில் விடுவிக்​கப்​பட்​டனர்.

பொது அமை​தியை நிலை​நாட்​ட​வும், சமூக நல்​லிணக்​கத்தை உறுதி செய்து நீதித் துறை​யின் சுதந்​திரம், கண்​ணி​யத்​தைப் பாது​காக்​க​வும்​ நீதி​மன்​றங்​களின்​ உத்​தர​வுப்படி சட்​டப்​படி நடவடிக்​கை எடுக்​கப்​பட்​டு உள்​ளது.

இவ்​​வாறு அறிக்​கை​யில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

[youtube-feed feed=1]