சென்னை: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி,  ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறில்லை  என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான  சச்சின் பைலட் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில், திமுக காங்கிரஸ் கூட்டணியில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதுதொடர்பாக சலசலப்பு எழுந்துள்ள நிலையில்,  மற்ற கட்சிகள் கேட்பதை போல தான் காங்கிரஸ் நிர்வாகிகளும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் கூறி உள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அரசியல் கட்சிகள் இடையே,  கூட்டணி, தொகுதிப்பங்கீடு,  குறித்து  பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக தலைமை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே வேளையில், ஆட்சியைகைப்பற்ற அதிமுக பாஜக கூட்டணி களத்தில் இறங்கி உள்ளது. இதற்கிடையில்  தவெக தலைவர் விஜய், தனிக்கூட்டணி அமைத்து, ஆட்சியை கைப்பற்ற களத்தில் குதித்துள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  பல ஆண்டுகளாக திமுகவுடன் கூட்டணியில் அதிகாரமற்ற நிலையில்,   உள்ள காங்கிரஸ் இந்த முறை ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்டு வருகிறது. இதை நேரடியாக கேட்காமல், கட்சி தலைவர்கள் மூலம் பேச வைக்கப்பட்டு வருகிறது. இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும், இதுகுறித்து,   மத்திய தலைமை தான் இது குறித்த முடிவை எடுக்கும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.

இருந்தாலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு தர முன்வரும் தவெகவுடன் கூட்டணி வைக்க சில தலைவர்கள் முயற்சித்து வருவதாககூறப்படுகிறது.

இந்த நிலையில்,  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது. ஆண்டாண்டு காலமாகவே தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு தனி வாக்கு சதவீதம் உள்ளது. தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்படுகிறோம்.

தமிழகத்தில் பாஜக கூட்டணி பல்வேறு முயற்சிகளை செய்தாலும் ஒரு போதும் வெற்றி பெற முடியாது. பாஜகவை எதிர்க்க இப்போது மட்டுமல்லாமல் எப்போதும் நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவோம்” என்றார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறியவர்,   “மற்ற கட்சிகளும் கேட்பது போல தான் காங்கிரஸ் நிர்வாகிகளும் கேட்கின்றனர். காங்கிரஸ் நிர்வாகிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் எந்த தவறும் இல்லை என்றார்.

தற்போதுள்ள தமிழ்நாடு அரசானது மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்களும் அரசின் செயல்பாடுகளை பாராட்டுகிறார்கள்” என்று பதிலளித்தார்.

மேலும்,  வருங்காலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது என்றவர், எஸ்ஐஆர் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தார்.

“தேர்தல் ஆணையத்தின் மூலம் பாஜக கொண்டு வந்த எஸ்.ஐ.ஆரால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ராஜஸ்தானிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மிகவும் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். நேர்மையான தேர்தலை என்பது தான் ராகுல் காந்தி உள்ளிட்ட எங்களது தலைவர்களின் எதிர்பார்ப்பு.

 

[youtube-feed feed=1]