சென்னை:  மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. மெரினா கடற்கரையில் உள்ள அனைத்து கடைகளையும் அகற்றி விட்டு 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த விசாரணையின்போது, கடற்கரை மக்கள் ரசிக்கத் தானே தவிர, அதனை ஷாப்பிங் மால்களாக மாற்ற முடியாது என கண்டித்த சென்னை உயர்நீதிமன்றம், தற்போது அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி என தெரிவித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் தனக்கு கடை ஒதுக்காததை எதிர்த்து தேவி என்பவர் தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுரேஷ் குமார், ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா அமர்வு, டிசம்பர் 22 ஆம் தேதி காலை 9.00 மணியளவில் மெரினா கடற்கரையில் நேரில் ஆய்வு செய்தனர்.

இது தொடர்பான வழக்கை ஜனவரி 2 ஆம் தேதி விசாரணையின்போது,   மெரினாவில் எந்த பகுதியில் எத்தனை கடைகளுக்கு அனுமதி வழங்குவது? என்பது தொடர்பாக மாநகராட்சி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

நீலக்கொடி பகுதியாக அறிவிக்கப்பட்ட 3 பகுதிகளுடன், நினைவிடங்களுக்கு பின்புறம் உள்ள 35 ஏக்கர் இடத்தையும் சேர்த்து, அழகுபடுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

புதிதாக கடைகளுக்கு அனுமதி வழங்கும் போது அதிகப்படியான கடைகளுக்கு அனுமதி வழங்க கூடாது.

மெரினாவில் உணவகங்கள், பொம்மைகள், பேன்சி பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும். மற்ற பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு அனுமதி வழங்க கூடாது என மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில்,  வழக்கு டிசம்பர் 8ந்தேதி மீண்டும்  நீதிபதிகள் ஆர். சுரேஷ் குமார், ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்பு  விசாரணைக்கு வத்தது.

அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவுக்கு பின் 1,006 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில், 900 கடைகளில் பொம்மை, உணவகம் மற்றும் பேன்சி கடைகளுக்கும், 106 சிறு கடைகளுக்கும் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த   நீதிபதிகள், நீலக் கொடி பகுதி 2026 செப்டம்பரில் நடைமுறைக்கு வரும் என மாநகராட்சி தெரிவிப்பதை ஏற்க முடியாது.

நீதிமன்ற உத்தரவின் படி நினைவிடங்கள் அருகே உள்ள இடத்தை உடனடியாக நீலக் கொடி பகுதிக்குள் கொண்டு வர வேண்டும். மற்ற இடங்கள் எப்போது நீலக் கொடி பகுதியாக அறிவிக்கப்படும் என்பதையும் அறிவிக்க வேண்டும்.

அதுபோல கடற்கடை பகுதிகளில் உள்ள கடைகள் எப்போது முழுமையாக அகற்றப்படும் என்பதை அறிவிக்க வேண்டும்.

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல்கள் உள்ளது? என கேள்வி எழுப்பியவர்கள்,  கோவளம் கடற்கரையில் எந்த கடைகளும் இல்லை. அதே போன்று மெரினாவை மாற்றுவதில் அரசுக்கு என்ன சிரமம் உள்ளது?  மெரினாவில் உள்ள கடைகளால் அதை கடற்கரை என யாரும் அழைக்க முடியவில்லை. கடைகள் நிறைந்த பஜாராக உள்ளது.

மாநிலக் கல்லூரி எதிரே உள்ள 100 ஏக்கர் இடத்தை கடைகள் இல்லாத இடமாக மாநகராட்சி அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன்,

அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்தது. மெரினாவில் 1006 கடைகளுக்கு அனுமதி வழங்க முடியாது என்று கூறிய நீதிபதிகள்,  வெறும் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அதில் தலா 100 என பொம்மைகள், உணவகம் மற்றும் பேன்சி கடைகள் அமைக்க வேண்டும்.

உழைப்பாளர் சிலை அருகே 100 கடைகளுக்கும், கலங்கரை விளக்கம் அருகே 100 கடைகளுக்கும், மற்ற இடங்களில் 100 கடைகள் அமைக்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 20 ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

கடற்கரையை ஷாப்பிங் மால்களாக மாற்ற முடியாது! சென்னை உயர்நீதி மன்றம்…

Blue Flag வசதிகள்: ரூ.7.31 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சென்னையின் அடையாளமான மெரினா பீச்….! எப்படி இருக்கு….?

[youtube-feed feed=1]