சென்னை: தவெக தலைவர் விஜயின்  கரூர் தேர்தல் பிரசார கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தும், 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில், பாதிக்கப்பட்வர்களை சந்தித்து ஆறுதல் கூட  வரும் 17-ந்தேதி  விஜய் கரூர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27ஆம் தேதி சனிக்கிழமை இரவு தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொண்டாா். இந்த பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி தவெக தொண்டா்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 41 போ் உயிரிழந்தனா். 60 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தவெகவினர், அதிமுகவினர், பாஜகவினர் திமுக அரசை குற்றம் சாட்டி வருகிறது.  இதற்கு திமுக அரசு மறுப்புதெரிவித்து வருவதுடன், திமுக கூட்டணி கட்சியினர் தவெகமீது கடுமையாக சாடி வருகின்றனர். இதற்கிடையில்,  இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர். மேலும் இந்த நிகழ்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்களையும் அரசு கைதுரு செய்து வருகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உச்சநீதிமன்றமும், தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,  கரூர் வேலுசாமிபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக த.வெ.க. தலைவர் விஜய் வரும் 17-ந்தேதி செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேலுசாமிபுரம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியையும் அவர் நேரில் வழங்க உள்ளார். மண்டபம் உள்ளிட்ட தகவல்களுடன் விஜய்க்கு பாதுகாப்பு வழங்க கோரி காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் த.வெ.க.வினர் மனு வழங்க உள்ளனர். காவல்துறை அனுமதி அளித்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

விஜயின் கரூர் கூட்டத்தில் நெரிசல் ஏற்படப்போகிறது என மதியம் 3.15 மணிக்கே திமுக நபர் வலைதளப்பதிவு! உச்சநீதிமன்றத்தில் தவெக தரப்பு வாதம்…

பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நிவாரணம் வழங்க கரூர் செல்கிறார் விஜய் – 20 பேர் கொண்ட குழு அமைப்பு…