சென்னை: டிஜிபி அலுவலகம் வந்த புரட்சி தமிழகம் கட்சி உறுப்பினரும், பிரபல யுடியூபருமான ஏர்போர்ட் மூர்த்தி மீது விசிகவினர்  தாக்குதல் நடத்தியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

சென்னையில்  புரட்சி தமிழகம் கட்சிஏர்போர்ட் மூர்த்தி மீது விசிகவைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தி முயற்சித்த சம்பவம்,  தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது என்பதற்காக சான்றாக உள்ளது. சென்னையில் பட்டப்பகலில் மதிய நேரத்தில்,   போலீஸ் தலைமை பதவியில்உள்ள சென்னையில் டிஜிபி அலுவலகம் வாயிலில் இந்த  சம்பவம் அரங்கேறி உள்ளது. இதை கண்ட பத்திரிகையாளர்கள், அதை படம்பிடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட நிலையில், அவர்களின் மோதலை தடுக்க  முயலாத அவலமும் அரங்கேறியது.

இதை கண்ட ஒருசில போலீசார் மட்டுமே சம்பவ இடத்துக்கு வந்து, அவர்களை விலக்க முயற்சித்தனர். இது தொடர்பான வீடியோ வைலாகி வருகிறது.