சென்னை:  #யார்_அந்த_SIRஐ காப்பாற்றியது யார்?  என அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு வழக்கு குற்றவாளி  ஞானசேகரன் வழக்கின் தீர்ப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கேள்வி எழுப்பி உள்ளார்.

அண்ணா பல்கலை. வழக்கு: SIR-ஐ காப்பாற்றியது யார் ? – எடப்பாடி பழனிசாமி கேள்வி Byமாலை மலர்2 ஜூன் 2025 11:26 AM பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அஇஅதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம். அதிமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது. சென்னை : அண்ணா பல்கலைக்கழக வழக்கில் மாணவி  பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதும், அதையடுத்து, பதியப்பட்ட எஃப்ஐஆரில்  சார்  சார் என யாரோ ஒருவருடன்  ஞானசேகரன் பேசியதாக கூறப்பட்ட நிலையில், விசாரணையில், அந்த சார் யாரும் கிடையாது என்றும், அந்த நேரத்தில் அவரது போன் பிளைட் மோடில் இருந்ததாகவும், தமிழ்நாடு காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,   ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ,  அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம்.

இந்த வழக்கில் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு. அத்தனையும் முறியடித்து, மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அதிமுக.

பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அஇஅதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம்.

அதனால் தான் #யார்_அந்த_SIR என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும் கேட்கிறோம்.

FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR யார்? விசாரணையின் போதே எதற்கு அந்த SIR Ruled-out செய்யப்பட்டான்?

எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது திமுக அரசு?

#SIRஐ_காப்பாற்றியது_யார் ?

இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. அதிமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

இனி ‘யார் அந்த சார்?னு கேட்டால் நீதிமன்ற அவமதிப்பு! அரசு வழக்கறிஞர் மிரட்டல்…