சென்னை : உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, மார்ச் 22ந்தேதி  அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும்  தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது.

உலக தண்ணீர் தினம்  மார்ச் 22ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம்  1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் ரியோ டி ஜனெய்ரோ நகரில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற  விவாதங்களைத் தொடர்ந்து,  1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22ம் தேதி  உலக நீர் வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி உலக நீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் நோக்கமானது,  நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பது..அதேவேளையில் மக்களிடையே  நாட்டின் நீர் வளப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வளர்த்தி ஏற்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், நடப்பாண்டு வரும் 22ந்தேதி வரும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு,   கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கூட்டத்தில்,  சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல் குறித்து   ஆலோசிக்கப்படுகிறது.

குறைவென் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும். கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறை பின்பற்றி நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கிராம ஊராட்சிகளில், கிராம சபைக் கூட்டங்கள் குறிப்பிட்ட தேதிகளில் நடத்தப்படுகின்றன. கிராம சபைக் கூட்டங்களில், ஊராட்சியின் வளர்ச்சி, தன்னிறைவு, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு போன்ற விவாதங்கள் நடைபெறும். கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம், கிராம சபைக் கூட்ட நடவடிக்கைகள் ஆகும்.

கிராம சபையில் குறைந்தபட்ச கோரம் குறிப்பிடப்பட்ட உறுபினர்கள், அதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்பு பஞ்சாயத்துத் தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகளுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.