ரஜினியின் வேட்டையன் பட ஆடியோ வெளியீட்டு விழா செப். 20ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் டி.ஜெ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் வேட்டையன்.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாக உள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்துள்ளார்.

இவர்களுடன், மஞ்சு வாரியார், ராணா டகுபதி, துஷாரா என ஒரு நடிகர் பட்டாளமே நடித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் இருந்து ‘மனசிலாயல்லோ’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

https://x.com/LycaProductions/status/1835551724398088387

தற்போது இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு குறித்த அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 20ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள இந்த பாடல் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மேலும், இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.