சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 13ந்தேதி கூடுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க 15 நாள் பயணமாக வரும்  27ந்தேதி (ஆகஸ்டு) 15 நாள் பயணமாக அமெரிக்க செல்ல உள்ளார். அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டுக்கு தொழில்தொடங்க வருமாறு அழைப்பு விடுகிறார்.

இந்த நிலையில்,  தமிழக அமைச்சரவை வரும் 13ந்தேதி  கூடுகிறது. இந்த கூட்டத்தில்அமெரிக்காவில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாகவும், முதலமைச்சர் பொறுப்பு  யாருக்கு வழங்கப்படலாம் என்பது குறித்து  விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் தெரிகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் ஆக. 13 ஆம் தேதி காலை 11 மணிக்கு அமைச்சரவை கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் விவாதிக்கப்படும் பொருள்கள் குறித்த குறிப்பு தனியே அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.