சென்னை: ஓராண்டுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? என்பது குறித்து அறிக்கை அளிக்க தமிர்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் நீதிமன்ற உத்தரவையும் செயல்படுத்துவதில்லை என்றும் அதிருப்தி தெரிவித்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை: ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் பொன்.பாண்டியனை பணியிடை நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது,  அரசின் உத்தரவை ரத்து செய்ததுடன், தமிழக அரசின் அரசாணைப்படி ஓராண்டுக்குள் ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை முடிக்காத வழக்குகளின் எண்ணிக்கை எத்தனை என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் கடநத் 2019ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சார்பவதிவாளர் பொன்.பாண்டியன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தாலும், நீண்டகாலத்துக்கு பணியிடை நீக்கத்தில் வைத்திருக்க முடியாது எனவும், எந்த வேலையும் வாங்காமல் 75 சதவீத ஜீவன படி வழங்குவதால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுவதாக கூறி, பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து, மீண்டும் பணி நியமனம் வழங்க உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, பதிவுத்துறை தலைவர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, துறை ரீதியான விசாரணையை, தமிழக அரசின் அரசாணைப்படி ஓராண்டுக்குள் முடிக்காமல், ஐந்து ஆண்டுகளாக பொன் பாண்டியனை பணியிடை நீக்கத்தில் வைத்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், ஐந்து ஆண்டுகளாக எந்த வேலையும் வாங்காமல், எதிர்மனுதாரருக்கு 75 சதவீத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது எனவும், குறித்த காலத்தில் விசாரணையை முடிக்காத அதிகாரியிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்ற அரசு உத்தரவையும் அமல்படுத்துவதில்லை. நீதிமன்ற உத்தரவையும் செயல்படுத்துவதில்லை என  அரசு மற்றும் உயர் அதிகாரிகள் மிது அதிருப்தி தெரிவித்தனர்.

எனவே, ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை குறித்த காலத்துக்குள் முடிக்காமல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை எத்தனை என இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.