மேஷம்
முயற்சிகள் வெற்றி தரும் வாரம் இது. தொழில் மற்றும் வியாபார துறையினர் பரபரப்பாக செயல்படுவாங்க. உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் முக்கியத்துவம் பெறுவாங்க. பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். அனுசரித்துச் செல்வது நல்லது. வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். கருத்துவேறுபாட்டின் காரணமாக பிரிந்திருந்த உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு மீண்டும் வந்து பேசுவாங்க. அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வாங்க. ஒரு சிலருக்கு அவங்க விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும். வியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்ள நேரும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவாங்க. சக வியாபாரிகளிடையே இணக்கமான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால்பொறுப்புகள் அதிகரிக்கவும், அதன் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்படவும் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும். அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளில் இப்போது ஈடுபடலாம். பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது.
மிதுனம்
அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. நீண்டநாளாக உங்களை வருத்திக்கொண்டிருந்த உடல் உபாதைகள் இனி குணமாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திடீர் அதிர்ஷ்ட சான்ஸ்கள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் பேசும்போது பொறுமை தேவை. அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். ஒங்களோட வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது மிக முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ இந்த வாரம் எதிர்பார்க்கமுடியாது. அட் த ஸேம் டைம்.. உங்க கௌரவத்துக்கு இழுக்கு வராது. யார் வாயிலும் விழுந்து புறப்பட மாட்டீங்க. உங்க திறமையை மேலிடம் கவனிச்சுக்கிட்டிருக்கு. பாராட்டு.. அவார்ட் ரிவார்ட் எல்லாம் பிற்பாடு கெடைக்கும். உங்க பொறுமைக்குப் பலன் ஷ்யூரா இருக்குங்க.
கடகம்
வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்மணிகளுக்கு பிரச்னை இல்லாத வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும். முயற்சிகள் வெற்றி தரும் வாரம் இது. தொழில் மற்றும் வியாபார துறையினர் பரபரப்பாக செயல்படுவாங்க. உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் முக்கியத்துவம் பெறுவாங்க. எடுத்த காரியத்தை செய்யும் போது எது சரி, எது தவறு என்று தடுமாற்றம் ஏற்பட்டாலும் திறமையால் அதனை செய்து முடிப்பீங்க. குடும்பத்துல மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இதுவரை இருந்துக்கிட்டிருந்த கருத்து வேற்றுமை நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் குடுப்பீங்க. முன்பைவிடப் பொறுமையாயிடுவீங்க. குட்…குட்.
சிம்மம்
மத்தவங்களை ஈஸியா நம்ப வேண்டாம். மத்தவங்களை நம்பி ஒங்களோட வேலையை ஒப்படைக்க வேண்டாம். வாரத் தொடக்கத்தில் பணியிடத்தில் வேலைப் பளு ஏற்படும். எதிரிகளை சமாளிக்கவும் வேண்டியது இருக்கும். தொழில் விஷயத்தில் பணப்பரிவர்த்தனை பிரச்சனைகளை மிகவும் கவனமாக இருக்கவும். நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக அலைச்சல் இருக்கும். வேலை மற்றும் குடும்பத்தை சமநிலைப்படுத்துவதில் சிரமம் ஏற்படாதபடி லேஸ் பேலன்ஸ் செய்ய வேண்டியிருக்கும். செய்துடுவீங்கம்மா. வார இறுதியில் காதலர்களுக்கிடையே தவறான புரிதல் சர்ச்சைக்கு வழி வகுக்கும். அப்புறம் பல் இளிச்சுக்கிட்டு சரியாயிடுவீங்க. அசடு வழிவீங்க. அதைவிட ஆரம்பத்திலேயே சண்டை போடாம ஒழுங்கா இருந்துடுங்க. விட்டுக்குடுத்துப் போங்க. அப்பா அல்லது அம்மாவோட உடல்நிலை குறித்து கவலை ஏற்படும். அது இந்த வாரமே சரியாயிடும். டோன்ட் ஒர்ரி.
கன்னி
இந்த வாரம் சாதகமானதாகவும், நன்மை அதிகமாக கிடைக்க சான்ஸ்ள்ளது. இந்த வாரத்துல உடலில் வலிமையும், மனசுல உற்சாகமும் இருக்கும். ஒங்களோட இலக்கை அடைவதில் வெற்றி பெறுவீங்க. குடும்பத்துல மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த வாரத்துல ஆன்மீகம், சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க சான்ஸ் உண்டு. வீட்டில் குடும்ப உறுப்பினர் களிடையே தேவையற்ற கருத்து மோதல்கள் மன அழுத்தத்தைத் தராதபடிக்கு நீங்களே விட்டுக் கொடுத்துப் போறது நல்லது. வியாபாரத்தில் நீங்கள் முடிவுகளை தொலைநோக்கு பார்வையுடன் எடுக்கவும். காதல் உறவுக்கு சாதகமான வாரம் இது. பேரன்ட்ஸ் கிட்ட விஷயத்தை உடைச்சுடுங்க. ஹாப்பியா ஓகே சொல்லுவாங்க. திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும். நீங்க கொஞ்சம் கெத்தாவும் டாமினேட்டிங்காவும் நடந்துக்க சான்ஸ் உள்ளது. பணிஞ்சு போங்க. குறைஞ்சா போயிடுவீங்க?
துலாம்
எந்த ஒரு பெரிய முடிவையும் எடுப்பதற்கு முன் யோசித்து செயல்படவும். ஒங்களோட நலம் விரும்பறவங்களோட ஆலோசனை பெறுவது நல்லது. உங்க வேலைகளை முடிப்பதில் புத்திசாலித்தனமாகவும், நேரத்தை திட்டமிட்டும் செயல்பட்டீங்கன்னா முழு வெற்றி ஒங்களுக்குத்தான். பிரச்சனைங்களுக்குத் தீர்வுக்கு எடுக்கறதுல நெருங்கிய நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் முழு ஆதரவைப் பெறுவீங்க. வாரத்தின் பிற்பகுதியில் வேலைகள் தொடர்பாக பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். டிராவல் செய்யும்போது பொருட்களை கவனமாக பாதுகாத்துக்குங்க. திருமண வாழ்க்கைல இனிமை நீடிக்கும். கடின நேரத்தில் வாழ்க்கைத் துணையின் மூலம் ஆதரவைப் பெறுவீங்க. எந்த ஒரு சூழ்நிலையிலும் நிதானத்தை இழக்க வேண்டாம். சவால்களை தைரியமாக எதிர்கொள்ளுவீங்க. வெற்றியும் பெறுவீங்க. முழுத் திறமையை வெளிப்படுத்துவீங்க.
விருச்சிகம்
திட்டமிட்ட காரியங்கள் சீராக நடக்கும். வீடு மற்றும் மனை தொடர்பான பிரச்சனைகள், வழக்குகளைப் பேசி தீர்ப்பது நல்லது. மனைவி / காதல் துணையின் உணர்வுகளை புறக்கணிக்காதீங்க. திருமண வாழ்க்கையில் கலையான பலன்கள் பெறுவீங்க. ஆபீஸ்லயும் பிஸினஸ்லயும் சாதகமான பலன்கள் அதிகரிக்கும். ரொம்பக் காலமா முயற்சி செய்துக்கிட்டிருந்த விஷயங்கள் செல்வாக்கு மிக்க நபர்களோட உதவியால ஹாப்பியா முடியும். வீடு, மனை வாங்க வேணும்னு நீங்க ஆசைப்பட்டுக்கிட்டிருந்த நீண்ட நாள் ஆசை நிறைவேறும். தொழில், வியாபாரத்துல புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் விஷயத்தில் அதிக பணம் செலவாகும். ஆபீசில் வேலை பாக்கறவங்க பணியிடத்தில் நற்பெயர் பெறுவீங்க. உங்களோட தொழிலில் கூடுதல் வரும். ஆனா அதுக்கேற்ற அளவுக்குக் கூடுதல் பொறுப்பு இன்கிரீஸ் ஆகும்.
சந்திராஷ்டமம் : ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 3 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
ஃபேமிலில உள்ளவங்க அல்லது ஃப்ரெண்ட்ஸ்கூடத் தொலைதூரப் பயணங்கள் சாத்தியப்படும். பயணங்களில் இனிமையாகவும், பொழுதுபோக்காகவும் அமையும். இந்த வாரத்துல வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். ஒங்களோட உணவு மற்றும் உடல் நலனில் அக்கறை தேவை. சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். காதல் உறவில் மிகவும் சாதகமான சூழல் இருக்கும். திருமண வாழ்க்கைல மகிழ்ச்சியா அமையும். பணியிடத்தில் யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேணாம். ஒங்களோட வேலையில சின்னச் சின்ன விஷயங்களில் கூட எச்சரிக்கையுடன் செயல்படவும். சில குட்டிக்குட்டி பிராப்ளம்ஸ் எதிர்கொண்டாலும், இனிமையான பலன்கள் அதிகமா கெடைக்கும். எந்த ஒரு சிச்சுவேஷன்லயும் ஒங்களோட பொறுமை மற்றும் விவேகத்தை இழக்காதீங்க. பணவரவுக்குக் குறைவில்லைங்க. ஜாலியாகப் பொழுது போக்குவீங்க.
சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 5 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
பணவரவு எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்கும் என்பதால் சிரமம் எதுவும் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான நிலையே காணப்படுகிறது. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படுகிறது. சிலருக்கு பணியின் காரணமாக வெளி மாநிலங்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ செல்லக்கூடிய சான்ஸ் கிடைக்கும். அதனால நன்மையே உண்டாகும். வியாபாரத்தில் பற்று வரவு நல்லபடியே இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம். ஒங்க கூட ஒர்க் பண்றவங்களையும் உங்களோட மேலதிகாரிங்களையும் அனுசரிச்சு நடந்துக்கணுங்க. பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படுகிறது. உங்களுக்கான வேலைகளைக் குறித்த நேரத்தில் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீங்க.
சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 8 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்
பொருளாதார நிலை நல்லபடியே காணப்படுகிறது. தேவையற்ற செலவுகளால் மனசுல சஞ்சலம் உண்டாக சான்ஸ் இருப்பதால அதை மட்டும் அவாய்ட் செய்துடுங்க. உடன்பிறந்தவர்களால் உதவியும் உற்சாகமும் ஏற்படும். சிலர் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீங்க. கோர்ட் வழக்குகளில் சாதகமான நிலையே காணப்படுகிறது. தாயின் உடல் நலனில் கவனமாக இருப்பது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அது ஒங்களோட சின்சியர் உழைப்பால கெடைக்கும். பொருளாதார நிலையில் இதுவரை இருந்த பிற்போக்கான நிலை மாறி, பணவரவு அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கொடுத்த கடன் திரும்ப வரும். கோர்ட் வழக்குகளில் நல்ல திருப்புமுனை உண்டாகும். குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியாகக் காணப்படும்.
மீனம்
ஆபீஸ்ல பணிப் பொறுப்பு இன்கிரீஸ் ஆகும். உடனே படபடப்பாயிடாதீங்க. கோப வசப்பட வேண்டவே வேண்டாம். பொறுமை கட்டாயம் தேவை. அதிகாரிங்க கிட்ட பேசும்போது பொறுமையும் நிதானமும் மிகவும் அவசியம். பணவரவு நல்லபடியே நீடிக்கிறது. தேவையற்ற செலவுகள் இல்லை ஸோ… நீங்க சிறிதளவு சேமிப்புக்கவும் முடியும். உடல் ஆரோக்கியத்துல மட்டும் கொஞ்சம் அதிகப்படி கவனம் தேவைப்படுகிறது. கடன் கொடுக்கறது.. வாங்கறது எதுவுமே வேணாங்க. மத்தவங்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம். கோர்ட் வழக்குகள் சாதகமாக முடியும். திருமண வயசுல உள்ளவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். ஆபீஸ்ல இதுவரை எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகளை இப்போது எதிர்பார்க்கலாம். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.