சென்னை: தமிழ்நாட்டின் புதிய கவர்னராக யார் வருவார் என்ற கேள்விக்கு, ”நான் ஜனாதிபதியோ, பிரதமரோ இல்லை’ என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
தமிழக கவர்னர் ரவியின் பதவிக்காலம் இன்றுடன் (ஜூலை 31) நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை புதிய கவர்னர் யார் என்பது குறித்தோ, தற்போதைய கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவி நீட்டிக்கப்படுமா என்பது குறித்து எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. தற்போதைய கவர்னர் ரவிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இடையே ஏழாம் பொருத்தமாக இருப்பதால், புதிய கவர்னராக யார் வருவார் என எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுப்பற்றி , சென்னை கொளத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியயாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் கூறியவர் , ”நான் ஜனாதிபதியோ, பிரதமரோ இல்லை” என பதிலளித்தார்.
வயது நிலச்சரிவு தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர், வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள முதல்வரிடம் பேசியிருக்கிறேன். கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படுகிறது. வயநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றார். வயநாடு நிலச்சரிவு தொடர்பான ‘சேதாரத்தை இன்னும் கணக்கெடுக்க முடியவில்லை என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளர். வயநாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது’ என்றார். கேரளாவுக்கு தேவையான எந்த உதவிகளும் தமிழ்நாடு அரசின் சார்பாக செய்கிறோம் என்று பினராயி விஜயனிடம் நான் உறுதியளித்துள்ளேன். இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மருத்துவக் குழுவும், நிவாரண நிதியாக ரூ.5 கோடி வழங்கப்பட்டது. தேவைப்பட்டால் இன்னும் உதவிகள் செய்கிறோம் என்று சொல்லியிருக்கிறோம்” என்றார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மீதான சாதி ரீதியிலான தாக்குதல் குறித்த கேள்விக்க, அதுகுறித்த இப்போது கருத்து கூற முடியாது என்றும் தெரிவித்தார்.
தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் பொறுப்பேற்றார். அதற்கு முன்பு நாகலாந்து கவர்னராக இருந்தார். இவரின் பதவிக்காலம் இன்றுடன் (ஜூலை 31) நிறைவடைகிறது. இதனால் இவருடைய பதவி நீட்டிக்கப்படுமா? அல்லது வேறொருவர் புதிதாக நியமிக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.