மேட்டூர்

ர்நாடகாவில் தொடரும் கனமழையால் காவிரியில் நீர் வரத்து அதிகரித்து மேட்டூர் அணை நீட் மட்டும் 103 அடியை எட்டி உள்ளது.

தென்மேற்கு பருவமழை கர்நாடக, கேரள மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பின. எனவே கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 981 கன அடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 33ஆயிரம் கனஅடியும் என மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 983 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதையொட்டி தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடியை தாண்டி காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதனால் ஒகேனக்கல்லில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்து வருகிறது. விரைவில் மேட்டூர் அணை நீர்மட்டம் தனது முழு கொள்ளளவை எட்ட உள்ளது.

தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 103.1 அடியை தாண்டி உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,23,184 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

[youtube-feed feed=1]