சென்னை
சென்னை உயர்நீதிமன்றம் கள்ளச்சாராய சாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அளிப்பதை எதிர்க்கும் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
.தமிழக அரசு கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டிருன்ந்த்து. தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றட்தில் மனு தாக்கள் செய்யப்பட்டது.
குமரேஷ் என்பவர் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் அரசு உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் மக்களின் வரிப்பணத்தை சட்டவிரோதமாக விஷ சாராயம் குடித்து இறந்தவர்களுக்காக பயன்படுத்தக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். இன்று இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில் குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அரசின் முடிவில் கோர்ட்டு தலையிட முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள் எந்த ஆதாரமும் இல்லாமல் விளம்பர நோக்கத்துக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.