சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு  வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,

24.07.2024 முதல் 26.07.2024 வரை;தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் மேலும் வலுவான தரைக்காற்று 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

27.07.2024 முதல் 30.07.2024 வரை; தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 – 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.