மேஷம்
வாரத்தின் முற்பகுதியில், ஒங்களோட உற்றார் உறவினர்களிடையே சுமூக உறவு நீடிக்க, பேச்சில கவனம் தேவை. சிலர் வேண்டுமென்றே விஷமப் பேச்சுகளை பேசுவாங்க. நீங்க அதைப் பத்தியெல்லாம் நெல் முனை அளவுகூடக் கவலைப்படாம போயி சாதிச்சுக்காட்டுவீங்க. ஃபேமிலில கடந்த சில வாரங்களாக ஒங்களோட நிம்மதியை கெடுத்த சில பிரச்சினைகள் மறைந்து, வாரத்தின் பிற்பகுதியில் நிம்மதியான உறக்கம் காணுவீங்க. முயற்சிகள் வெற்றி தரும் வாரம் இது. தொழில் மற்றும் வியாபார துறையினர் பரபரப்பாக செயல்படுவாங்க. குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். குழந்தைகளால் மனநிம்மதி கிடைக்கும். லேடீஸ்க்கு, எதைப் பற்றியாவது நினைத்துக் கவலைப்படுவீங்க. கலைத் துறையினருக்கு, மற்றவர்களுக்கு உதவப்போய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். அரசியல்வாதிகள், சிறிய வேலையையும் கூடுதலாகச் சிரத்தையெடுத்துச் செய்ய வேண்டி இருக்கும்.
ரிஷபம்
ஆபீஸ்ல மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வாங்க. ஒரு சிலருக்கு அவங்க விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும். வியாபாரம் அல்லது உத்யோகம், காரணமாக சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்ள நேரும். சக, பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவாங்க. சக வியாபாரிகளிடையே இணக்கமான சூழ்நிலை உண்டாகும். பெண்களுக்கு உறவினர்கள் வருகையால்பொறுப்புகள் அதிகரிக்கவும், அதன் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்படவும் கூடும். இந்த வாரம் எல்லா விஷயங்களும் சாதகமாவே முடியும். முக்கியஸ்தர்களின் சந்திப்பும் ஹெல்ப்பும் கெடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தைரியம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன் மனைவிக்குள் பிரச்சினைகள் தீரும். மனசுல நிம்மதி இன்கிரீஸ் ஆகும்.
மிதுனம்
பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும். மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும். அரசு விவகாரங்களில் சற்றுக் கேர்ஃபுல்லா செயல்படுவது அவசியம். கலைத்துறையினருக்கு, புதிய ஒப்பந்தங்களில் ஈடுபடும்போது கவனமாக இருக்கணுங்க. லேடீஸ்க்கு, காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த ஹெல்ப் கிடைக்கும். ஸ்டூடன்ட்ஸ், தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டுப் படிப்பது எதிர்காலத்துக்கு உதவும். திறமையுடன் காரியங்களைச் செய்வீங்க. அதிகப் பாராட்டை எதிர்பார்க்க முடியாது. அது இப்போ வராது. கொஞ்ச லேட்டாக் கெடைக்கும்.
கடகம்
நீண்டநாளாக உங்க டாடியை வருத்திக்கிட்டிருந்த உடல் உபாதைகள் இனி குணமாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் வாயை மூடிக்கிட்டிருந்தீங்க. இன்னும் கொஞ்ச காலத்துக்கு அந்த பேசா விரதத்தைக் கடைப்பிடிச்சுட்டீங்கன்னா நீங்க ஜெயிச்சாச்சுன்னு அர்த்தம். சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிரச்னை இல்லாத வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும். முயற்சிகள் வெற்றி தரும் வாரம் இது. உத்தியோகஸ்தர்கள் ஆபீஸ்ல முக்கியத்துவம் பெறுவாங்க. பலன்கள்: இந்த வாரம் வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் அல்லது வியாபாரம் சீராக நடக்கும்.
சிம்மம்
உத்தியோகத்துல இருப்பவர்களுக்கு வேலை பளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீங்க. அதனால என்னங்க? அதற்கு ஏற்ற வருமானம் மட்டுமில்லாம, பாராட்டு மற்றும் அவார்ட் அல்லது ரிவார்ட் கெடைக்கவும் சான்ஸ் இருக்குங்க. குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சினைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீங்க. பட் ஒன் திங்.. உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு எடுத்த காரியம் முதலில் தடைப்பட்டாலும்கூட பின்னர் நல்லபடியாக நடந்து முடியும் மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும்.
சந்திராஷ்டமம் : ஜூலை 25 முதல் ஜூலை 27 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
வெளியில் தங்கும் சூழல் ஏற்படும். எடுத்த காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, எது சரி, எது தவறு என்று தடுமாற்றம் ஏற்பட்டாலும் திறமையாய் அதைச் செய்து முடிப்பீங்க. பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். நிதி உதவி கிடைக்கும். வாடிக்கையாளர் மத்தியில் மதிப்பு கூடும். உத்தியோகத்துல இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சம்பள உயர்வும் வரலாம். இந்த வாரம் புது விஷயங்கள் எதிலும் ரொம்ப கேர்ஃபுல்லா ஈடுபடுங்க. பேச்சில் இனிமை, சாதுரியத்தால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்துல, தெளிவாகச் சிந்தித்து எதையும் வெற்றிகரமாகச் சாதிப்பீங்க. புதிய பதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை நீங்கும். அரசியல்வாதிகளுக்கு, மேலிடத்தைச் சமாளிக்க வேண்டி வரலாம்.
சந்திராஷ்டமம் : ஜூலை 27 முதல் ஜூலை 29 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்
இந்த வாரம் டாடியோட உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்துக்கிட்டிருந்த பிரச்சினைகளில் சாதகமான நிலை காணப்படும். தான தர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் மனசில் ஆசை வரும். செய்வீங்க. நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீங்க. இந்த வாரம் விருப்பங்கள் கைகூடும். எடுக்கற விஷயங்களில் சக்ஸஸ் உண்டாகும். உத்தியோகத்துல சாமர்த்தியமாக விஷயங்களைக் கையாண்டு நன்மை அடைவீங்க. எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக்கூடும். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவது நன்மை தரும். அரசியல்வாதிகளின் விருப்பங்கள் நிறைவேறும். உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பாங்க. கலைத் துறையைச் சேர்ந்தவங்க, எல்லார் கிட்டேயும் சுமுகமாக நடந்துகொள்வீங்க.
சந்திராஷ்டமம் : ஜூலை 29 முதல் ஜூலை 31 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
உத்தியோகஸ்தர்கள் ஆபீஸ்ல முக்கியத்துவம் பெறுவாங்க. பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். அனுசரித்துச் செல்வது நல்லது. வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்திருந்த ரிலேடிவ்ஸ், உங்களைப் புரிந்துகொண்டு மீண்டும் வந்து பேசுவாங்க. சின்னச்சின்ன நிகழ்ச்சிகள் மனத்துக்கு இதம் அண்ட் மகிழ்ச்சியைத் தரும். லேடீஸ்க்கு, மனச்சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பணவரவு கூடும். ஸ்டூடன்ட்ஸ், விளையாட்டுப் போட்டிகளுக்காக வெளியூர் செல்வீங்க. உத்தியோகஸ்தர்களுக்கு தள்ளிப்போன நன்மைகள் விரைவாய் நடந்து வியக்க வைக்கும். குழந்தைகளின் சிரமங்க விரைந்து தீரும். நல்ல விஷயங்கள்ல இருந்துக்கிட்டிருந்த நிதானப்போக்கு மாறும்.
சந்திராஷ்டமம் : ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 3 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளில் இப்போது ஈடுபடலாம். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு மாற்றிச் செல்ல சான்ஸ் இருக்கு. இந்த வாரம் எந்தக் கடினமான சூழ்நிலையிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாம பார்த்துக்குங்க. சில சிக்கலான பிரச்சினைகளில் சுமுகமான முடிவைக் காணலாம். தொழில், பிசினஸ் வலுவாக நடக்கும். உத்தியோகத்துல கவனமாக இருக்கணுங்க. வேறு வேலைக்கு முயல்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடறது நல்லதுங்க. ஸ்டூடன்ட்ஸ், சாமர்த்தியமான செயல்களால் மத்தவங்க மனத்தில் இடம்பிடிப்பீங்க. கல்வியில் கவனம் அதிகரிக்கும். மத்தவங்களுக்கு உதவுவதால் வீண் அலைச்சல் உண்டாகலாம்.
மகரம்
சிறிய வாய்ப்புகள், நிகழ்ச்சிகளைக் கூடத் தட்டிக்கழிக்க வேண்டாம். பிஸினஸில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். ஆபிஸில் சக பணியாளர்களை அனுசரிச்சு நடந்துக்குங்க. ஒங்களோட வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது மிக முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ இந்த வாரம் எதிர்பார்க்கமுடியாது. ஆனால் அதற்கான அறிவிப்பு நேரடியாவோ மறைமுகமாவோ உங்களுககுக் கெடைச்சு.. மனசு சந்தோஷப்படும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் சான்ஸ் இருக்குங்க. பணத்தேவை உண்டாகும். பிசினஸ் தொடர்பான கவலை ஏற்படும். உத்தியோகத்துல கூடுதல் கேர்ஃபுல்லாவேலைகளைச் செய்ய வேண்டும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு, அரசு விவகாரங்களில் தலையிடும்போது கவனம் தேவை.
கும்பம்
பணம் வருவது அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் வரும். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீங்க. கவுரவம், அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்திகரமாக இருக்கும். உங்க கிட்ட உதவி கேட்டு வர்றவங்களை உதாசீனப் படுத்தாதீங்க. கணவன் பிள்ளைகளிடம் அன்பாகப் பேசிப் பழக வேண்டும். தாய்வழி உறவினர்களிடமிருந்து உதவி உண்டு. அரசியல்வாதிகளுக்கு, சின்னச் சின்ன விசயங்களுக்குக் கூடப் படபடப்பாவீங்க. கலைத் துறையினருக்கு, விட்டுக் கொடுத்து காரியங்களைச் சாதிப்பீங்க. லேடீஸ்க்கு, மனசுல குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மின் சாதனங்களை இயக்கும்போது கொஞ்சமே கொஞ்சம் கேர்ஃபுல்லா இருந்தாப் போதுங்க. பெரிசாக் கவலைப்பட எதுவும் இல்லை.
மீனம்
குடும்பத்துல மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இதுவரை இருந்துக்கிட்டிருந்த கருத்து வேற்றுமை நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் குடுத்து அவங்களை சந்தோஷப்படுத்துவீங்க. பெண்கள் கிட்ட ஆண்களும்.. ஆண்கள்கிட்ட பெண்களும் ரொம்பவே கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை இருக்கும். மனக்குறை இருக்கும். புதிய நபர்கள், எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் கவனமாகப் பேசிப் பழக வேண்டும். தொழில், வியாபாரத்தில் பழைய பாக்கியை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உத்தியோகத்துல இழுபறியான காரியங்களைச் சிறப்பாச் செய்து முடிப்பீங்க. எந்த விஷயத்துலயும் இத்தனை நாளா இருந்துக்கிட்டிருந்த தடை தாமதங்கள் எதுவும் இருக்காது.