சென்னை

யக்குநர் பார்த்திபன் தனது படத்துக்கு டிக்கட் விலை குறைப்பை அறிவித்துள்ளார்

குழந்தைகளை மையமாக வைத்து பிரபல நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டீன்ஸ் திரப்படத்தில். பல புதுமுக குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் படத்துக்கு டி இமான் இசையமைத்துள்ளர், சில மாதங்களுக்கு முன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று முடிந்த இப்படத்தில் பார்த்திபனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப்போன நிலையில், ஜூலை 12ஆம் தேதி இந்தியன் 2 படத்துடன் பார்த்திபனின் டீன்ஸ் படமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை பயோஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.  படத்தின் டீரைலர் கடந்த மாதம் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பார்த்திபன் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில்,

“எதற்காகவும் நான் என்னை குறைத்து கொண்டதே இல்லை. ஆனால் டீன்ஸ் படத்தின் டிக்கெட் விலை முதல் சில நாட்களுக்கு இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.100 மட்டுமே. இதில் நட்டமே இல்லை. வசதி குறைவானவர்களும் காண வசதியாக இருப்பதன் நாட்டமே”

எனத் தெரிவித்துள்ளார்.