சென்னை: தாம்பரம் – நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி ஜுலை மாதம் வரை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல சென்னை – கேரளா இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், கூடுதலாக 6 முறை இயக்கப்படும் என்று ரயில்வேதுறை அறிவித்துள்ளது.
கோடை விடுமுறையையொட்டி, பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தெற்கு ரயில்வே பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கி வருகிறது. அதன் ஒருபகுதி யாக, தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வாராந்திர சிறப்பு ரெயில் (06036), இயக்கப்பட்டு வரகிறது. இந்த ரயில் சேவை மேலும் நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட உள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வரும் வாரந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012), வரும் ஜூலை மாதம் 7, 14, 21 ஆகிய தேதிகள் வரையும், மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து திங்கட்கிழமை தோறும் காலை 7.45 மணிக்கு புறப்பட்டு அதேநாள் இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06011), வரும் ஜூலை மாதம் 8, 15, 22 ஆகிய தேதிகள் வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, தாம்பரத்தில் இருந்து வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை தோறும் இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1.40 மணிக்கு கேரள மாநிலம் கொச்சுவேலி செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06035), வரும் ஜூலை மாதம் 4, 6, 11, 13, 18, 20 ஆகிய தேதிகள் வரையும், மறுமார்க்கமாக, கொச்சுவேலியில் இருந்து வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.35 மணிக்கு தாம்பரம் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06036), வரும் ஜூலை மாதம் 5, 7, 12, 14, 19, 21 ஆகிய தேதிகள் வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதுபோல சென்னை – கேரளா இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், கூடுதலாக 6 முறை இயக்கப்படும் என்று ரயில்வேதுறை அறிவித்துள்ளது.
ரயில் எண்: 06035 தாம்பரம் – கொச்சுவேலி: இந்த ரயில் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டுமே இயங்கும். 04.07.2024 முதல் 20.07.2024 வரை செயல்படும். 6 முறை செயல்படும். தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம் ஜங்ஷன், விருத்தாச்சலம் ஜங்ஷன், திருச்சி, திண்டுக்கல் ஜங்ஷன், மதுரை ஜங்ஷன், விருதுநகர் ஜங்ஷன், சிவகாசி, ஸ்ரீவல்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடயநல்லூர், தென்காசி ஜங்ஷன், செங்கோட்டை, தென்மலை, புனலூர், அவனேசுசரேம், கொட்டாரக்கரை, குந்தாரா, கொல்லாம் ஜங்ஷன், கொச்சுவேலி நிறுத்தங்களில் ரயில் நிற்கும்.
ரயில் எண்: 06036 கொச்சுவேலி- தாம்பரம்: இந்த ரயில் வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இயங்கும். 05.07.2024 முதல் 21.07.2024 வரை செயல்படும். 6 முறை செயல்படும்.கொச்சுவேலி, கொல்லம் ஜங்ஷன், குந்தாரா, கொட்டாரக்கரை, அவனேசுசரேம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, ஜங்ஷன், தென்காசி, கடயநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவல்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் ஜங்ஷன், மதுரை ஜங்ஷன், திண்டுக்கல் ஜங்ஷன், திருச்சி, விருத்தாச்சலம் ஜங்ஷன், விழுப்புரம் ஜங்ஷன், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட நிறுத்தங்களில் நின்று செல்லும்.