சென்னை

பிரபல நடிகை அமலா பாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள்ளது.

நடிகை அமலா பால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தவர் ஆவார். இவர் சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானாலும், மைனா திரைப்படத்திலிருந்து பலரால் அறியப்பட்டவர். தொடர்ந்து தலைவா உள்ளிட்ட படங்களில் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியானார்.

அமலா பாலுக்கு தெய்வத்திருமகள் திரைப்படத்தில் இயக்குநர் ஏ.எல்.விஜய்யுடன் ஏற்பட்ட காதல், தலைவா திரைப்படத்திற்கு பிறகு பெற்றோர் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது. அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று விலகினர்.

அமலா பால் விவாகரத்துக்குப் பிறகு சினிமாவில்தீவிர கவனம் செலுத்தி அஜய் தேவ்கன் இயக்கத்தில் வெளிவந்த ‘போலா’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 26-ம் தேதி தனது பிறந்தநாளில் தனது காதலரை அறிமுகப்படுத்தினார்.

கேரளாவில் கடந்த நவம்பர் மாதம் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமான சில வாரங்களிலேயே தனது கர்ப்ப செய்தியையும் அறிவித்தார். கடந்த 11ம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்