டெல்லி

த்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் மணிப்பூரில் கலவரம் செய்யும் இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்த் உள்ளதாக கூறியுள்ளார்

பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் மணிப்பூர் மாநிலத்தில் கலவரமாக மாறியது. இந்நிலையில் இரு பெண்கள் நிர்வாணப்படுத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான வீடியோ வெளியானது நாடெங்கும்ம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு மே மாதம் 23-ம் தேதி இந்த சம்பவம் நடந்திருந்தாலும், இது தொடர்பான வீடியோக்கள், சமூக வலைதளங்களில் ஜூலை மாதம் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் வெடித்த வன்முறையில் 200க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

கலவரங்கள் தொடர்ந்து வெடித்து கொண்டே இருந்த நிலையில் பலரும் பிரதமர் மோடியை மணிப்பூரை வந்து பார்வையிட வலியுறுத்தினர்.

அங்கு மோடி செல்லவில்லை என்பதால் எதிர்க்கட்சிகள் பல விமர்சனங்களை முன்வைத்தன. தேர்தலின் போதும் பாஜக மணிப்பூரில் பிரசாரம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

நேற்று மணிப்பூர் மாநில நிலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி, மணிப்பூர் டிஜிபி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அமித்ஷா அந்தக் கூட்டத்தில்,

“மணிப்பூரில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த தேவைப்பட்டால் கூடுதலாக மத்திய படைகள் அனுப்பி வைக்கப்படும். மணிப்பூரில் அமைதியும், இயல்பு நிலையும் திரும்ப மத்திய படை போலீசார் அனுப்பி வைக்கப்படுவார்கள். வன்முறையை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காணப்படும்”

எனத் தெரிவித்தார்.