ரக்பூர்

கேரள மாணவி ஒருவர் கரக்பூர் ஐஐடி விடுதிய்ல் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நாடெங்கும் பல நகரங்களில் இந்திய தொழில்நுட்ப கழக்ம் எனப்படும் ஐஐடி உள்ளன.  அவ்வகையில்  மேற்குவங்காள மாநிலம் கரக்பூரில் ஒரு ஐஐடி அமைந்துள்ளது. இங்கு கேரள மாநிலத்தை சேர்ந்த தீபிகா (வயது 21) 3ம் ஆண்டு பயொடெக்னாலஜி படிப்பு பயின்று வந்தார்.

மாணவி தீபிகா கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். தீபிகா கல்லூரி விடுதி வளாகத்தின் மாடியில் உள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை மாணவி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றது.