சென்னை

மிழக பாஜக பொருளாளர் எஸ் ஆர் சேகரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் 2 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி ரொக்கம் சிக்கியது. இது பாஜக நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்லப்பட்டது என புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பணவிவகாரம் தொடர்பாக பா.ஜனதா மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரை விசாரணைக்கு ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் வழங்கினர்.எஸ்.ஆர். சேகர் ஆஜராகததால் அவரிடம் நேரில் விசாரணை நடத்துவதற்காக சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.எஸ்.பி.சசிதரன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று கணபதி சக்தி நகரில் உள்ள உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.

அங்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் எஸ்.ஆர்.சேகரிடம் விசாரணை நடத்தி ரயிலில் சிக்கிய பணம் எங்கே இருந்து வந்தது. கட்சிக்கும், அந்த பணத்துக்கும் சம்பந்தம் உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு எஸ்.ஆர்.சேகர் மிகவும் பொறுமையாக பதில் அளித்து உள்ளார். இந்த விசாரணை சுமார் 2 மணி நேரம் நடந்துள்ளது.