சென்னை
இன்று தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதில் கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.
தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல் திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
நாளைதேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 23 ஆம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வரும் 24 ஆம் தேதி நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வருகிற 24-ந் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இன்னும் 5 நாட்களுக்கு குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள், கேரள-கர்நாடக கடலோர பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீச வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.