சென்னை

மிழக அமைச்சர் மா சுப்ரமணியன் கோவிஷீல்ட் தடுப்பூசியல் தமிழகத்தில் பாதிப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நீதிமன்றத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசியால் ரத்தம் உறைதல், ரத்தத் திட்டுகள் குறைவு போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம் என அந்த தடுப்பூசியை தயாரித்த அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.பலர்  கோவிஷீல்ட் தடுப்பூசியால் உயிரிழப்புகளும் பக்க விளவுகளும் ஏற்படுவதாக பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், பிரிட்டன் நீதிமன்றத்தில் ல் கோவிஷீல்ட் தடுப்பூசி, மிக அரிதாக பக்க விளைவை ஏற்படுத்தும் என்று ஆஸ்ட்ராஜெனிகா கூறியுள்ளது.

 

பெரும்பாலாஅ இந்தியர்கள் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் போட்டுக்கொண்டுள்ள நிலையில், கோவிஷீல்ட் தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என அந்த தடுப்பூசியை தயாரித்த அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் பலரும் தடுப்பூசியால் தங்களுக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

இன்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோயம்பேடு மார்க்கெட்டில் பழச்சாறு, மோர், இளநீர் வழங்கும் தண்ணீர் பந்தலை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பிறகு அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அந்த சந்திப்பின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

“எந்த விதமான தடுப்பூசியாக இருந்தாலும் அவரவர் உடலில் உள்ள நோய் எதிர்ப்புத் திறனை பொறுத்து தான் விளைவுகள் இருக்கும். ரத்தம் உறைதல் மாதிரியான பிரச்சனைகள் சிலருக்கு இருக்கலாம். ஆனால் இதுவரை தமிழ்நாட்டில் அது போன்ற பாதிப்புகள் வெளியில் தெரியவில்லை. கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பயத்துடனே வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை

மக்கள் தங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையாத வண்ணம் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதற்காக காலையில் எழுந்து நடப்பது உள்ளிட்ட உடற்பயிற்சிகளை செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் இதுவரை எங்கும் கோவிஷீல்டு தொடர்பான பக்கவிளைவு சம்பந்தமாக எந்த பாதிப்பும் பதிவாகவில்லை”

எனத் தெரிவித்துள்ளார்.