சென்னை:  தமிழ்நாடு முழுவதும் அரசு விரைவு பேருந்துகளில் யு.பி.ஐ மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, அரசு போக்குவரத்து  கழகத்திற்கு சொந்தமான 1068 பேருந்துகளிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பயணிகள் இனிமேல்,  ஜி பே, கிரெடிட்/டெபிட் கார்ட், ஃபோன் பே மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம் என போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழக அரசு பேருந்துகளில் பயணிகளின் வசதிக்காக போக்குவரத்து துறை பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக சோதனை முறையில்  சென்னை மாநகர பேருந்துகளில் யுபிஐ மூலம் டிக்கெட் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதைத்தொடர்ந்து,. சென்னை மாநகராட்சியில் பிஎஸ்-VI பேருந்து சேவையை அமைச்சர் உதயநிதி, சிவசங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். டெபிட் மற்றும் யுபிஐ மூலம் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்கு வசதியாக, கண்டக்டர்களுக்கு மின்னணு”, டிக்கெட் வழங்கும் இயந்திரங்களையும் அமைச்சர் உதயநிதி வழங்கினார். சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மட்டும் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம், தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூறினார்.”

இதன் காரணமாக பயணிகள் பயணச்சீட்டு பெறுவதற்கு யு.பி.ஐ. மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம். இந்நிலையில், அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறும் வசதியை 328 ஏசி பேருந்துகள் உட்பட 1068 பேருந்துகளிலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது. விரைவு பேருந்துகளில் ஜி பே, கிரெடிட்/டெபிட் கார்ட், ஃபோன் பே மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம் என போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.