சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது சமூக வலைத்தளமான பக்கத்தில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டதாக ஈரோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு ஈரோடு நீதிமன்றத்தில் இருந்து, சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

எச் ராஜா இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனா; இந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் எச்.ராஜா மீதான வழக்கை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் எச்.ராஜா மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், சர்ச்சைக்குரிய கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டது எச்.ராஜாதானா? என்று கேள்வி எழுப்ப அதற்கு எச்.ராஜா தரப்பில் ஆம் என்று பதில் அளிக்கப்பட்டது.

எனவே எச் ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, சிறப்பு நீதிமன்ற்த்தில் நடைபெறும் விசாரணையை எதிர்க்கொள்ளும்படி உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.