சென்னை: மக்களவை தேர்தலையொட்டி,  தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குகள் பதிவு ஆகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

18வது மக்களவைக்கான  முதற்கட்ட தேர்தலானது  தமிழ்நாடு, புதுச்சேரி,  அசாம், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகண்ட் உத்தர பிரதேசத்தில் 8 தொகுதி, மத்திய பிரதேசத்தில் 6 தொகுதி, கேரளா மற்றும் உள்பட  உள்பட மொத்தம் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் இன்று  தேர்தல் நடைபெறுகிறது. அத்துடன் சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும்,    தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

அதன்படி, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில்  முற்கட்ட  பாராளுமன்றத் தேர்தல்  வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு  நடை பெறுகிறது. பல இடங்களில் விறுவிறுப்பான வாக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் சென்னையில் வாக்குப்பதிவு மந்தமாகவே உள்ளது.

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 15.10 சதவிகிதமும், தருமபுரியில் 15.04சதவிகிந வாக்குகளும், அதற்கு அடுத்த படியாக சேலத்தில் 14.79 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்த வாக்கு சதவிகிதம் என்று பார்க்கும் போது மத்திய சென்னையில் 8.59 சதவிகிதமும், வட சென்னையில்9.73சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 12.55% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதே வேளையில், அருணாச்சல பிரதேசத்தில்  6.44% பதிவும்,  சிக்கிம் 7.90%, லட்சத்தீவுகள் மிகக் குறைந்தவை – 5.59%, திரிபுரா மாநிலத்தில்  அதிகபட்சமாக – 15.21% வாக்குகளும் பதிவாகி உள்ளது.