மதுரை
அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் முகம் குக்கர் போல உள்ளதாக அவர் மனைவி தனது பிரசாரத்தில் தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை ஆதரித்து, அவரது மனைவி அனுராதா முதன்முறையாகப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று மதுரை உசிலம்பட்டியில் நடைபெற்ற பிரசாரத்தில்அவர் உரையாற்றி உள்ளார்/
கூட்டத்தில் அனுராதா தினகரன்
“ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற சின்னம் குக்கர் சின்னம் ஆகும். அப்போதைய வாக்குப்பதிவில் குக்கர் சின்னத்திற்கான பட்டனே தேய்ந்துவிட்டது என்று அதிகாரிகள் சொன்னார்கள். நீங்களும் அதே போல் தேனி தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் டி.டி.வி.தினகரனை வெற்றி பெற வைக்க வேண்டும்.
நீங்கள் தினமும் வீட்டில் குக்கரை பார்க்கும்போது உங்களுக்கு டி.டி.வி.தினகரனின் ஞாபகம் வர வேண்டும். ஏனென்றால் குக்கரைப் போல் தானே அவரது முகமும் குண்டாக இருக்கிறது. நீங்கள் தக்கருக்குப் போடும் ஒவ்வொரு ஓட்டும் உங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஓட்டு ஆகும்.”
என்று உரையாற்றினார்.