சென்னை
நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 350 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடை பெற உள்ளது. இதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த 20 ஆம் தேதி முதல் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வந்தனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 350 பேர் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். தற்போது வரை தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது. நாளையுடன் தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் முடிவடைய உள்ளது.