சென்னை
தமிழக அரசு 10 ஆம் வகுப்பில் பயிலும் சிறுபான்மையின மாணவர்களுக்குத் தமிழ் தேர்வில் இருந்து விலக்கு அளித்துள்ளது.
நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“தமிழைத் தாய் மொழியாக கொண்டிராத 10-ம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்குத் தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வரும் 26 ஆம் தேதி முதல் நடைபெற உள்ள பொதுத்தேர்வில் இருந்தே விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்த விலக்கு நடப்பு ஆண்டு தேர்வுக்கு மட்டும் பொருந்தும். தமிழ் தேர்வுக்குப் பதிலாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதக்கூடிய சிறுபான்மை பிரிவு மாணவர்கள் அவர்களுடைய மொழிப் பாடத்தைத் தேர்வாக எழுதி கொள்ளலாம்.”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.