2015ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நாளை (6-3-2024) நடைபெறுகிறது.
ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள இந்த விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமை தாங்குகிறார்.
இந்த விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருது தனி ஒருவன் படத்திற்கும் சிறந்த நடிகருக்கான விருது இறுதிச் சுற்று படத்தில் நடித்த ஆர். மாதவனுக்கும் சிறந்த நடிகைக்கான விருது 36 வயதினிலே படத்தில் நடித்த ஜோதிகாவுக்கும் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.@mp_saminathan அவர்கள் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருதுகள் – பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கிறார்கள்.#CMMKSTALIN | #TNDIPR |@mkstalin pic.twitter.com/AnGZGyuNGP
— TN DIPR (@TNDIPRNEWS) March 4, 2024
இதனுடன் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதும் வழங்கப்படுகிறது.