சென்னை: தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், “மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 71-வது பிறந்தநாளை மார்ச் 1ந்தேதி சிறப்பாக கொண்டாடினார். மறைந்த தவைலர்களின் நினைவிடங்களில் மரியாதை செலுத்தியதுடன், வீட்டில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் அண்ணா அறிவாலயம் சென்று, தொண்டர்கள் மத்தியில் கேக் வெட்டி மகிழ்ச்சி தெரிவித்ததுடன், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைத்து தரப்பினரிடமும் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.
பிறந்தநாள் கொண்டாடிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி! பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே…. தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன் என குறிப்பிட்டுள்ளார்.
மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி!
பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே…. தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன். pic.twitter.com/5YUUzqFEgs
— M.K.Stalin (@mkstalin) March 1, 2024