தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கு. செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.

2019ம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த கே.எஸ். அழகிரிக்கு பதிலாக புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜேஷ் குமார் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.