டில்லி

ண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய 3 நிறுவனங்களும் பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையைப் பெற்றுள்ளன.

மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு பெட்ரோல்-டீசல் பயன்படுத்துபவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு கச்சா எண்ணெய் மீதான சுங்க வரியைக் கணிசமாகக் குறைத்தது. எனவே பெட்ரோல் லிட்டருக்கு 13 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 16 ரூபாயும் குறைக்கப்பட்டது. கடந்த 600 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2023 – 24 ஆம் ஆண்டு முதல் பகுதியில் மட்டும் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல்-டீசல் விற்பனை மூலம் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.75 ஆயிரம் கோடி லாபம் உபரியாகக் கிடைத்துள்ளது.

தவிர கடந்த நிதியாண்டிலும் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய உபரி வருவாய் கிடைத்துள்ளது. அடுத்த வாரம் இது குறித்த தகவல்களை அடுத்த வாரம் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளன.

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தங்களது லாபத்தில் ஒரு பகுதியை வாடிக்கையாளர்களுக்குச் சுமையை குறைக்கும் வகையில் வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதால் பெட்ரோல் டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விலை குறைப்பு தொடர்பாக இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய 3 நிறுவனங்களும் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.  அடுத்த மாதம் முதல் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.