விஜயவாடா

ஆந்திராவில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலையை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று திறந்து வைக்க உள்ளார். 

டாக்டர் அம்பேத்கர் சிலை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை ஆகும்.

இந்த இலை 125 அடி உயரத்துடன் 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது., இதன் மொத்த உயரம் 206 அடி ஆகும்.  இன்று  இந்த சிலையை ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைக்க உள்ளார்.

சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கரின் சிலைக்கு அருகே பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த மைதானத்தில் மினி திரையரங்கம், அருங்காட்சியகம், நீரூற்றுகள், வாகன நிறுத்துமிடம், உணவு விடுதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.